திருவனந்தபுரம், கோவை - சில்சார் ரயில்கள் பகுதியளவு ரத்து

By செய்திப்பிரிவு

சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக, கோவையிலிருந்து ஜூலை 10-ம் தேதி இரவு 9.45 மணிக்கு அசாம் மாநிலம் சில்சார் புறப்பட்டுச் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12515), கவுகாத்தி வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல, இன்று (ஜூலை 5) மற்றும் 12-ம் தேதிகளில் இரவு 8.10 மணிக்கு சில்சாரிலிருந்து புறப்பட்டு கோவை வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12516), சில்சார்-கவுகாத்தி இடையே ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில், கவுகாத்தியிலிருந்து புறப்பட்டு கோவை ரயில்நிலையம் வந்தடையும். இன்று மற்றும் 12-ம் தேதிகளில் மாலை 4.55 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, கோவை வழியாக சில்சார் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12507) கவுகாத்தி வரைமட்டுமே இயக்கப்படும்.

இதேபோல, வரும் 7 மற்றும் 14-ம்தேதிகளில் இரவு 8.10 மணிக்கு சில்சாரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12508), சில்சார்-கவுகாத்தி இடையே ரத்து செய்யப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்