இலங்கை அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் மெரைன் போலீஸ் ரோந்து படகு நிறுத்தப்படுமா?

By செய்திப்பிரிவு

இலங்கையில் இருந்து வரும் அகதிகளை மீட்க தனுஷ்கோடியில் மெரைன் போலீஸாரின் ரோந்துப் படகுகளை நிறுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட் டத்தில் மெரைன் போலீஸாருக்கு மண்டபம், தேவிபட்டினம், தொண்டி ஆகிய இடங்களில் மூன்று காவல் நிலையங்களும், ராமேசுவரம், புதுமடம், பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் துணைக் காவல் நிலையங்களும் உள்ளன.

கடலில் ரோந்து மற்றும் மீட்புப் பணிக்காக கடலோரப் பாதுகாப்புக் குழுமத்துக்காக பிரேத்யேகமான அதிவேகப் படகுகள் உள்ளன. மேலும் மீட்புப் பணிக்காக மெரைன் போலீஸாருக்கு 1098 என்ற பிரத்யேக இலவச எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து அகதிகளாக வரும் பெரும்பாலானோர் தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடைகளில் வந்து இறங்குகின்றனர்.

அவர்களைப் பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வர மெரைன் போலீஸார், கடலோரக் காவல்படையின் ஹோவர் கிராப்ட் படகு அல்லது மீனவர்களின் படகுகளையே உதவிக்கு நாட வேண்டி உள்ளது.

மெரைன் போலீஸாருக்கு சொந்தமான படகுகள் தனுஷ்கோடி பகுதியில் ரோந்து செல்லவும், இலங்கையில் இருந்து வரும் அகதிகளைமீட்கவும் தனுஷ்கோடி படகுகள் இறங்குதளத்தில் நிறுத்தப்பட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்