தூத்துக்குடி நகரை புறக்கணித்த தலைவர்கள்: தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம்

By ரெ.ஜாய்சன்

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரச் சாரம் இன்று மாலையுடன் முடிவ டைகிறது. முக்கிய தலைவர்கள் தூத்துக்குடி நகரை புறக்கணித்ததால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு தேர்தலுக்கும் முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடி வரத் தவறியதில்லை. ஆனால், இந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு அவர் தூத்துக்குடி வராதது அதிமுக தொண்டர்களுக்கு ஏமாற் றத்தை அளித்துள்ளது. அதிமுக அணியை பொறுத்தவரை சமக தலைவர் ஆர்.சரத்குமார், நடிகை விந்தியா உள்ளிட்ட சில நடிகர், நடிகைகள் மட்டுமே தூத்துக் குடியில் பிரச்சாரம் செய்தனர்.

திமுக

திமுக தலைவர் மு.கருணாநிதி யும் இம்முறை தூத்துக்குடி வரவில்லை. ஆனால்

மு.க.ஸ்டாலின், மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது. நடிகர் இமான் அண்ணாச்சி, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி என். சிவா திருச்செந்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்தார்.

காங்கிரஸ்

காங்கிரஸ் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏரலில் மட்டும் பேசினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்தில் சில இடங்களில் பிரச்சாரம் செய்தபோதும், தென்மாவட்டங்களில் அவர்கள் பிரச்சாரம் செய்யாதது அக்கட்சி தொண்டர்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

மக்கள் நலக்கூட்டணி

தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி- தமாகா கூட்டணியை பொறுத் தவரை வைகோ மட்டுமே தூத்துக்குடி நகருக்குள் பிரச்சாரம் செய்தார். மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அவர் வாக்கு சேகரித்தார்.

விஜயகாந்த் ஓட்டப்பிடாரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மட்டும் பேசினார். பிரேமலதா திருச்செந்தூர், ீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். ஆனால், தூத்துக்குடி நகருக்குள் வரவில்லை. ஜி.கே. வாசன் திருச்செந்தூர், ீவைகுண்டம், விளாத்திகுளம் தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கோவில்பட்டியில் மட்டும் பிரச்சாரம் செய்தார். அக்கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ீவைகுண்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் பிரச்சாரம் செய்தார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரவேயில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் தூத்துக்குடி மாவட்டம் வரவில்லை.

பாஜகவை பொறுத்தவரை மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சில இடங்களில் பிரச்சாரம் செய்தும், தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரவில்லை.

பாமகவை பொறுத்தவரை அக்க ட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் தூத்துக்குடி, கோவில்பட்டியில் பிரச்சாரம் செய்தார். அதுபோல அன்புமணி தூத்துக்குடியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தலா ஒரு இடத்தில் பேசினார்.

பல்வேறு தலைவர்கள் தூத்துக்குடி நகரை புறக்கணித் துள்ளது தொண்டர் கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்