சென்னை: "அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது, அவர்களிடம் பணம் மட்டும்தான் உள்ளது, வேறு ஒன்றும் கிடையாது. கோடிகள் பல உள்ளது, கொள்கை கிடையாது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இந்திய ராணுவத்திற்கு ஆட்களைச் சேர்க்க மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாதை திட்டத்தை கைவிடக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, அக்னிபாதை திட்டத்தை கைவிட வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " அதிமுகவில் நடப்பது சொந்தகட்சி பிரச்சினை. இதில் எந்த சார்பு நிலையும் நாங்கள் எடுக்கமுடியாது. நாங்கள் இபிஎஸ் அல்லது ஓபிஎஸ்ஸை ஆதரிப்பதால், எங்களுக்கு என்ன பலன் இருக்கப்போகிறது. நாங்கள் என்ன அக்கட்சியின் செயற்குழு உறுப்பினரோ, பொதுக்குழு உறுப்பினரோ கிடையாது. இது அவர்கள் கட்சி பிரச்சினை, அவர்கள் பேசி தீர்த்துகொண்டு வரவேண்டும். நாங்களும் அந்த பிரச்சினையை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த கருத்தும் இல்லை.
ஆனால் தற்போதுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களை விலைகொடுத்து வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அவர்களிடம் பணம் மட்டும்தான் உள்ளது. வேறு ஒன்றும் கிடையாது. கோடிகள் பல உள்ளது, கொள்கை கிடையாது" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago