சென்னையில் ஓடும் சுமார் 72 ஆயிரம் ஆட்டோக்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி குறைந்தபட்ச கட்டணம் ரூ.25, கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 என அறிவிக்கப்பட்டது.
ஜிபிஎஸ் (வாகன நகர்வு கண்காணிப்பு) தொழில்நுட்பம் வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் பிப்ரவரி மாதம் 28-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் வழங்கப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்றவாறு கட்டணத்தை மாற்றியமைக்கும் வகையில் முத்தரப்பு கமிட்டியும் அமைக்கப்படவில்லை.
இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் மீண்டும் பேரம் பேசி கட்டணத்தை வசூல் செய்ய தொடங்கியுள்ளனர். இது, பொது மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 3 நாட்களில் மட்டுமே 300 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளன (ஏ.ஐ.டி.யு.சி) மாநில பொதுச் செயலாளர் சேஷசயனம் கூறுகையில், ‘‘ஆட்டோவுக்கு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, இதுவரையில் பெட்ரோல் விலை ரூ.14 உயர்ந்துள்ளது. எனவே அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தால் ஆட்டோ தொழிலாளர்களுக்கு தினமும் இழப்புதான் ஏற்படுகிறது. அன்றாடம் வாழ்க்கை நடத்தவே தடுமாறி வரும் நிலையில், தற்போது ஆட்டோக்களை ஆங்காங்கே பறிமுதல் செய்து ரூ.5000 வரை அபராதம் வசூலிக்கின்றனர். எனவே, அரசு அறிவித்தபடி முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டரை விரைவில் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆட்டோ தொழிற்சங்கங்கள் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்தவுள்ளோம்’’ என்றார்.
சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்க வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.எல். மனோகரன் கூறுகையில், ‘‘எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி வரும் 13-ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள கூட்டத்தில் முடிவு செய்யவுள்ளோம். இதில், முத்தரப்பு கமிட்டி அமைப்பது, விரைவில் டிஜிட்டல் மீட்டர்களை வழங்க வலியுறுத்துவது ஆகியவை குறித்து முக்கிய முடிவுகளை எடுத்து அறிவிக்கவுள்ளோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago