வீரப்பன் பாணியில் மரம் கடத்தல், யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்டு பல வழக்குகளில் தலைமறைவாக இருந்தவரை மேட்டூர் வனத்துறை அதிகாரிகள் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேட்டூர் அருகே உள்ள ஊஞ்சசோரைச் சேர்ந்தவர் யானை வீரப்பன் என்கிற சரவணன். கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சொரக்காமடுவு பகுதியில் தனது கூட்டாளி மந்திரியுடன் பதுங்கியிருந்த சரவணனை துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால், சரவணன் மற்றும் கூட்டாளிகள் வனத்துறையினர் பிடியில் சிக்காமல் தப்பினர்.
இந்நிலையில், பல்வேறு குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட சரவணனை நேற்று கொளத்தூர் போலீஸார் கைது செய்த தகவலறிந்த மேட்டூர் வனத்துறையினர், 2010-ம் ஆண்டு யானை தந்தம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த சரவணன் மீது, பிடி ஆணை வைத்து இருப்பதால் அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கொளத்தூர் போலீஸாரிடம் கேட்டனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
இதையடுத்து, மேட்டூர் வனத்துறையினர் சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை சிறையில் அடைக்க மேட்டூர் குற்றவியல் நடுவர் பாக்யராஜ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீஸார் சரவணனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago