மீஞ்சூர் - வண்டலூர் வெளி வட்டச் சாலையில் சுங்கக் கட்டணம் உயர்வு 

By செய்திப்பிரிவு

சென்னை: மீஞ்சூர் - வண்டலூர் வெளி வட்டச் சாலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 60 கிலோமீட்டர் தூர வெளிவட்ட சாலையானது ரூபாய் 2,156 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் இந்த சாலையில் 4 இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த சாலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வரதராஜபுரம், கோலப்பன் சேரி, பாலவேடு சின்ன முல்லை வாயில் ஆகிய சுங்க சாவடியில் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வரதராஜபுரம் சுங்கச்சாவடியில் முதல் சென்று வர 50 ரூபாய் முதல் 323 ரூபாய் வரையும், மாதம் முழுவதும் பயணிக்க 2923 ரூபாய் முதல் 18,890 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோலப்பன் சேரி சுங்கச்சாவடியில் முதல் சென்று வர 21 ரூபாய் முதல் 115 ரூபாய் வரையும், மாதம் முழுவதும் பயணிக்க 1225 ரூபாய் முதல் 7913 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பாலவேடு சங்கச்சாவடியில் முதல் சென்று வர 27 ரூபாய் முதல் 173 ரூபாய் வரையும், மாதம் முழுவதும் பயணிக்க 1577 ரூபாய் முதல் 10,192 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சின்ன முல்லை வாயில் சுங்கச்சாவடியில் முதல் சென்று வர 18 ரூபாய் முதல் 119 ரூபாய் வரையும், மாதம் முழுவதும் பயணிக்க 1080 ரூபாய் முதல் 6976 ரூபாய் ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்