பள்ளி வாகனங்களில் சிசிடிவி, சென்சார் கட்டாயம்: தமிழக அரசு அதிரடி

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளி வாகனங்களில் சிசிடிவி மற்றும் சென்சார் ஆகியவற்றை கட்டாயமாக்கும் வகையில் மேட்டார் வாகன திட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் ஆயிரக்கனக்கான பள்ளி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று போக்குவரத் துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. மேலும், வாகனங்களில் நேரடி ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பள்ளி வாகனத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதியில் தலா ஒரு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும். பேருந்து பின்னால் எடுக்கும்போது ஓட்டுநர் பார்ப்பதற்கு வசதியாக இந்த கேமரா பயன்படும் வகையில் அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாகனத்தில் எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் ஆக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக விரைவில் மேட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE