கடலூர்: விழுப்புரம் அருகே நிச்சயதார்த்த விழாவில் சாப்பிட்ட 59 பேருக்குவாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந் தவர் கமலக்கண்ணன். இவரது மகளுக்கு நேற்று முன்தினம் மாலை நிச்சயதார்த்த நிகழ்வு, பேரங்கியூரில் நடந்தது. இதில் இரு வீட்டார் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியையொட்டி விருந்து பரிமாறப்பட்டது. உணவருந்திய பலருக்கு வீடு திரும்பியபிறகு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 59 பேர் பண்ருட்டி அரசு மருத்துவமனை மற்றும் விழுப்புரம் - முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காடாம்புலியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் முத்தாண் டிக்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாராமன் உள்ளிட்ட போலீஸார் மருத்துவமனைகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
உணவு தயாரித்தது மற்றும் விநியோகம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago