சென்னை: சென்னை - சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் காலாவதியான மாத்திரைகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - சைதாப்பேட்டை கருணாநிதி நினைவு வளைவு அருகில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மகப்பேறு சிறப்பு பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில், இந்த கிணற்றில் மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ளதை பார்த்து சிகிச்சை பெற வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
‘
» 'அதிமுகவில் நடக்கும் அதிகாரப்போட்டி அக்கட்சியை பலப்படுத்தக்கூட பயன்படாது' - கே.பாலகிருஷ்ணன்
» சென்னை தி.நகர் ப்ரீமியம் பார்க்கிங் | காருக்கு ரூ.60, டூ வீலருக்கு ரூ.15 கட்டணமாக நிர்ணயம்
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று காலை அங்கு வந்து மருந்துகளை வெளியே எடுத்து ஆய்வு செய்தனர்.
ஆய்வில், அந்த மருந்துகள், மாத்திரைகள் அனைத்தும் காலாவதியானவை என்று தெரியவந்தது. மேலும், மருத்துவமனை நிர்வாகமே காலாவதியான மருந்துகளை கிணற்றில் கொட்டியதும் தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago