சென்னை: 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 96.90 சதவீதம், உயிரியல் பாடத்தில் 95.99 சதவீதம், கணிதத்தில் 95.56 சதவீதம், இயற்பியலில் 94.55 சதவீதம்,வேதியியலில் 94.42 சதவீதம் பேரும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மே 10-ம் தேதி தொடங்கி, மே 31-ம் தேதி வரை 11-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வை 4 லட்சத்து 33 ஆயிரத்து 319 மாணவிகள், 4 லட்சத்து 10 ஆயிரத்து 355 மாணவர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் உட்பட, மொத்தம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 மாணாக்கர் எழுதினர். இதில், 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.07 சதவீதம். 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 மாணவியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 94.99 சதவீத மாணவிகள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதே போல், 3 லட்சத்து 48 ஆயிரத்து 243 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 84.86 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவியர் 10.13 சதவீதம் அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். 11-ம் வகுப்பு தேர்வெழுதிய ஒரு மூன்றாம் பாலினத்தவரும் தேர்ச்சிப் பெற்றுள்ளார். தேர்வு முடிவுகள் தொடர்பான முக்கிய தகவல்கள்:
> மொத்தமுள்ள 7535 மேல்நிலைப் பள்ளிகளில், 2605 மேல்நிலைப்பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளன.
> 103 அரசு மேல்நிலைப் பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளன.
» தரவு அறிவியல் படிப்புக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வின்றி மாணவர்களை அழைக்கும் சென்னை ஐஐடி
» கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவைக் கைவிடுக: வைகோ
> அறிவியல் பாடப்பிரிவுகளில் 93.73 சதவீதமும், வணிகவியல் பாடப் பிரிவுகளில் 85.73 சதவீதமும், கலைப்பிரிவுகளில் 72.49 சதவீதமும், தொழிற்பாடப் பிரிவுகளில் 76.15 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
> கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 96.90 சதவீதமும், உயிரியல் பாடத்தில் 95.99 சதவீதமும், கணிதத்தில் 95.56 சதவீதமும், இயற்பியலில் 94.55 சதவீதமும்,வேதியியலில் 94.42 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
> வணிகவியலில் 88.43 சதவீதமும், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் தலா 87.96 சதவீதமும், கணக்குப் பதிவியலில் 87.91 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
> கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் அதிகபட்சமாக 2186 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 2183 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
> தாவரவியல் பாடத்தில் 3 பேரும், விலங்கியல் பாடத்தில் 16 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
> 11-ம் வகுப்பு தேர்வெழுதிய 4470 மாற்றுத்திறனாளி மாணாக்கரில் 3899 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
> தேர்வெழுதிய 99 சிறைவாசிகளில் 89 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago