மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதியக் கோரி மனுத்தாக்கல்

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, தேர்தல் நடத்தை விதியை மீறி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதி அ.தி.மு.க. செயலர் கே.ஜி.உதயகுமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதித் தேர்தலில் விளவங் கோடு தொகுதி அ.தி.மு.க. பொறுப் பாளராக பணிபுரிந்தேன். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத் துக்காக மார்ச் 14-ம் தேதி குமரி மாவட்டம் வந்தார். அன்று இரவு குழித்துறையில் உள்ள பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான அரசினர் தங்கும் விடுதியில் தங்கினார். இது தேர்தல் நடத்தை விதியை மீறிய செயலாகும்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அதிகாரியிடம் உடனடி யாக புகார் அளித்தேன். அவர் நடவடிக்கை எடுக்காததால், களியக்காவிளை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் குமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன். இதுவரை என் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நான் அளித்த புகாரின்பேரில் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.எம்.அக்பர்அலி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர் வீரகதிரவன் ஆஜராகி, தேர்தல் நடத்தை மீறல் தொடர்பாக தேர்தல் அதிகாரிதான் புகார் அளிக்க முடியும். 3-வது நபர் புகார் அளிக்க முடியாது. 3-வது நபர் புகாரின் அடிப்படையில் போலீஸார் தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு பதிவு செய்ய முடியாது என்றார். இதையடுத்து விசாரணையை ஜூன் 24-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்