மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இதுவரை மதுரையிலிருந்து காசி, கயா போன்ற இடங்களுக்கு ரயில் மூலம் சுற்றுலா நடத்தி வந்தது. தற்போது ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்சியிலிருந்து கயா, வாரணாசி, அலகாபாத் மற்றும் அயோத்தியா போன்ற ஆன்மிக தலங்களுக்கு விமானம் மூலம் சுற்றுலா நடத்த இருக்கிறது.
இந்த 7 நாட்கள் சுற்றுலா ஜூலை 27-ல் திருச்சியில் இருந்து தொடங்குகிறது. விமானக் கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்குமிடம், உணவு, பயணக் காப்பீடு உட்பட ஒரு நபருக்கு ரூ.37,900 வசூலிக்கப்பட இருக்கிறது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு இந்த சுற்றுலா நடைபெறும். அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியை பயன்படுத்தி இந்த சுற்றுலாவில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8287931977 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago