பழனிசாமியை கண்டித்து ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியை கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டத் தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவமதிக்கப்பட்டதைக் கண்டித்தும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு எதிராகவும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல இடங்களில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர்.

திருப்புல்லாணி அருகே ஆண்டித்தேவன்வலசை கிராமத்தில் அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் உடையத்தேவன் தலைமையில் துணைச் செய லாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் பிரேமா ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் ஒன்றியச் செயலாளர் கருப்பசாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர், பழனிசாமியின் உருவபொம்மையை எரித்தனர்.

கமுதியில் பேருந்து நிலையம் அருகே ஓபிஎஸ் ஆதரவாளர்களான ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் பரிதி இளம்வழுதி, கமுதி ஒன்றிய அவைத் தலைவர் கருப்புச்சட்டை முருகேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்கள் சரவணன், வரதராஜன், கமுதி ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் டேவிட் பிரதாப்சிங், ஒன்றிய மாணவரணியைச் சேர்ந்த பசும்பொன் முருகன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் ஒற்றை தலைமை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழனிசாமிக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்