மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளும், தஞ்சாவூரில் 8, திருவாரூரில் 4, நாகையில் 6, புதுக்கோட்டையில் 6, கரூரில் 4, பெரம்பலூரில் 2, அரியலூரில் 2 என மொத்தம் 41 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2011-16 சட்டப்பேரவையில் மத்திய மண்டலத்தில் இருந்து அதிமுக சார்பில் 27 பேர், அதிமுக கூட்டணியிலிருந்த தேமுதிக சார்பில் 3 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தலா ஒருவர், திமுக சார்பில் 7 பேர், அதன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒருவர், பாமக சார்பில் ஒருவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இடம்பெற்றிருந்தனர்.
இந்த 41 தொகுதிகளில் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தவிர, மற்ற 39 தொகுதிகளில் தேர்தல் முடிந்ததுள்ளது. இவற்றில் அதிமுக 23 இடங்களிலும், திமுக 16 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது அதிமுக 3 தொகுதிகளை இழந்தது. திமுக 10 தொகுதிகளை கூடுதலாக பெற்றுள்ளனது.
ஒற்றுமையில்லாத அதிமுக
திருச்சி மேற்கு, திருவெறும்பூர், துறை யூர், லால்குடி ஆகிய 4 தொகுதிகளை அதிமுக இழப்பதற்கு அந்த கட்சியின் நிர்வாகிகளிடையே நிலவிய ஒற்றுமை யின்மை, முன்பு இருந்த எம்எல்ஏக்களின் செயல்பாடுகளில் மக்களுக்கு திருப்தி யின்மை ஆகியவை காரணமாக அமைந்துவிட்டன.
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிட்ட மணப்பாறை, காங்கிரஸ் போட்டியிட்ட திருச்சி கிழக்கு, முசிறி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மந்தமாக இருந்ததால் இந்த தொகுதிகளை திமுக கூட்டணி இழக்க நேர்ந்தது.
எளிமையானவர்களால் வலிமை
அதிமுகவின் நால்வரணியில் ஒரு வராக விளங்கிய வைத்தியலிங்கம், ஒரத்தநாடு தொகுதியில் தோல்வி அடைந்த தற்கு அவரது அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றமும், திமுக வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு இருந்த நற்பெயருமே முக்கிய காரணம் என தொகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். கும்பகோணம், திரு விடைமருதூர், திருவையாறு தொகுதி களில் திமுக வேட்பாளர்களின் எளிமை யான அணுகுமுறை திமுகவுக்கு வெற் றியை தந்துள்ளது. பாஜக, மக்கள் நலக் கூட்டணி கணிசமான வாக்குகளை பிரித்ததால் பேராவூரணியில் திமுக தோல்வியடைந்தது.
அதிமுகவை வீழ்த்திய பூசல்
திமுக தலைவர் கருணாநிதிக்கு மீண்டும் வெற்றிக்கனியை கொடுத்துள்ளனர் திருவாரூர் தொகுதி மக்கள். திருவாரூர் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் நன் னிலம் தொகுதியில் மட்டுமே அதிமுக வால் வெற்றி பெற முடிந்தது. கோஷ்டி பூசலால் முன்னாள் மாவட்டச் செயலாளர் காமராஜ் கூட தோல்வி அடைந்தார். வலி மையான கூட்டணி அமையாததால் 45 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்துறைப் பூண்டி தொகுதியை கம்யூனிஸ்ட் இழந்தது.
நாகையில் வாகை சூடிய அதிமுக
நாகை மாவட்டத்தில் மொத்தமுள்ள 6-ல் 5 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி யுள்ளது. திமுக கூட்டணியிலுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிட்ட பூம்புகார், மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நாகை, காங்கிரஸ் போட்டியிட்ட வேதாரண்யம் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது.
கீழ்வேளூர் (தனி) தொகுதியில் மட்டுமே திமுகவால் வெற்றி பெற முடிந் தது. திமுகவில் நிலவும் உள்கட்சி பூசல்கள் மற்றும் பூம்புகார், நாகை, வேதாரண்யம் தொகுதிகளை தொடர்ச்சி யாக கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து வருவது ஆகியவையே தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
புதுகையில் திமுக உத்வேகம்
புதுக்கோட்டை 6 தொகுதிகளும் அதிமுக வசம் இருந்தன. அமைச்சர் விஜயபாஸ்கர்கூட விராலிமலை தொகுதி யில் மிகவும் போராடிதான் வெற்றி பெற முடிந்தது. அதிமுகவிலிருந்து நீக்கப் பட்ட சொக்கலிங்கம் சுயேச்சையாக போட்டியிட்டு சுமார் 23 ஆயிரம் வாக்கு களை பெற்றதால் புதுக்கோட்டை தொகு தியில் அதிமுக தோல்வியடைந்தது.
அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக் கரசரின் மகன் ராமச்சந்திரன் அதிமுக வேட்பாளரிடம் 2,291 வாக்கு வித்தி யாசத்தில் தோல்வியடைய, மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர் பெற்ற வாக்குகளும் காரணமாக அமைந்துவிட்டன. வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்ட ஆலங்குடி தொகுதியும், முன்னாள் அமைச்சர் ரகுபதி போட்டியிட்ட திருமயம் தொகுதியும் திமுகவுக்கு வெற்றியைத் தந்தன.
கரூர் தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கரை வீழ்த்த காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிமுகவிலி ருந்த சிலரே மறைமுகமாக உதவியாக தகவல் பரவியது. அதையும் மீறி விஜய பாஸ்கர் வெற்றி பெற்றார். திமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் போட்டியிட்டதால் கிருஷ்ணராயபுரம் தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றது.
முழுமையாக கைப்பற்றிய அதிமுக
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள 4 தொகுதிகளில் ஒன்றில்கூட திமுக கூட்டணியால் வெற்றி பெற முடிய வில்லை. பெரம்பலூர் தொகுதியை சமூக சமத்துவப் படைக்கு ஒதுக்கியதே அந்த தொகுதியில் திமுக கூட்டணியின் தோல் விக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
எம்எல்ஏ சிவசங்கரை குன்னம் தொகு தியிலிருந்து அரியலூருக்கு மாற்றியதால் அவரும் தோல்வியைச் சந்தித்தார். பாமகவின் வெற்றி வேட்பாளர்களுள் ஒரு வராக கருதப்பட்ட குரு, அதிமுகவிடம் தொகுதியை இழந்துள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கு பேரிடி
மத்திய மண்டலத்தில் திமுக கூட்டணி கட்சிகளான புதிய தமிழகம், சமூக சமத்துவப் படை, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தோல்வியை சந்தித்தன. திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றவில்லை என் பது அவர்களது மனக்குமுறலாக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago