சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்கும் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணைய வழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு ஜூன் 26-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை (நாளை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
நாளைய இந்தியாவை வளமானதாகவும், அறிவியல் சிந்தனையோடும் வளர்த்தெடுக்க வேண்டும் என விரும்பியவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இளைய தலைமுறையினரிடம் உரையாடும்போதெல்லாம் தொடர்ந்து இதை வலியுறுத்தி வந்தார்.
கலாம் மறைவுக்கு பிறகு, அவரது அறிவியல் சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டுசேர்க்கும் வகையில், ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து நடத்தி வருகிறது.
அந்த வகையில், வரும் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) மாலை 6 மணிக்கு ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணைய வழி கலந்துரையாடல் நிகழ்வை நடத்துகிறது.
இதில் ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு, அப்துல் கலாமின் அண்ணன் மகளும், கலாம் அறக்கட்டளை தலைவருமான டாக்டர் ஆ.ப.ஜெ.மு.நசீமா மரைக்காயர் ஆகிய இருவரும் பங்கேற்று, கலந்துரையாட உள்ளனர். இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு கலாம் ஆற்றியுள்ள சிறப்பான பங்களிப்பு குறித்தும், கலாமின் சிறப்பான பண்புகள் பற்றியும் இந்த கலந்துரையாடலில் அவர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடைகளை அனுப்பும் 25 பார்வையாளர்களுக்கு, ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு எழுதிய புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். ஆர்வம் உள்ள அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00064 என்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ளவும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago