புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து முத்தியால் பேட்டை நோக்கி பிஆர்டிசி மினி பேருந்து ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை சேலியமேடு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சிவலிங்கம் ஓட்டினார்.
முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன்கோயில் சந்திப்பில் இப்பேருந்து வந்தபோது டைமிங் பிரச்சினை காரணமாக தனியார் பேருந்து ஊழியர்கள், பிஆர்டிசி பேருந்து ஓட்டுநர் சிவலிங்கத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிவலிங்கம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் பிஆர்டிசி ஓட்டுநர், நடத்துநர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவங்களை கண்டித்து நேற்று முன்தினம் மாலை ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரியில் இயக்கப்படும் பிஆர்டிசி பேருந்துகள் எதுவும் ஓடவில்லை.
பேருந்துகள் அனைத்தும் புதுச்சேரி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப் பட்டன. சென்னை, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநில பகுதிகளுக்கும் பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பிஆர்டிசி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். பணிமனை முன்பு திரண்ட ஊழியர்கள், தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் நேற்றும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பிஆர்டிசி பேருந்துகள் நேற்று 2-வது நாளாக இயக்கப்படாததால் கிராமப்புற பயணிகள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் கடும் பாதிப்புக் குள்ளாகினர்.
8 ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம்
இதற்கிடையில் முன்னறிவிப்பின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 8 ஒப்பந்தஊழியர்களை பணிநீக்கம் செய்துபிஆர்டிசி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago