சென்னை: "தேர்தல் ஆணையத்தை நாடியதாக வரும் செய்திகள் தவறு. தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் செல்லவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் சென்றதாக கூறுவது தவறான செய்தி" என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேட்டி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பொதுக்குழுவைக் கூட்ட வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. நீதிமன்றத்திலேயே , பொதுக்குழுகவை நடத்தலாம் என்று கூறிவிட்டோம். 23 தீர்மானங்களை மட்டும்தான் நிறைவேற்ற வேண்டும். மற்ற தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துவிட்டனர்.
அப்படியிருக்கும்போது, இவர்கள் எப்படி பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றலாம். அவைத் தலைவர் தேர்வு தீர்மானத்தை எப்படி கொண்டு வரலாம். எனவேதான், நான் அவைத் தலைவர் தேர்வு செல்லாது என்று கூறுகிறேன். ஒருவேளை, அவைத் தலைவர் தேர்தல் நடத்துவதாக இருந்தால், வேட்புமனு யாரிடமிருந்தாவது பெற்றார்களா, போட்டியிட யாரேனும் விரும்புகிறீர்களா என கேட்டார்களா, இப்படி எதையுமே செய்யாமல், அவைத் தலைவரை எப்படி தேர்ந்தெடுக்கலாம்.
பொதுக்குழுவில் கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். இதன்மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுமே ரத்தாகும் போது, புதிதாக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் பதவியும் ரத்தாகிறது. பிறகு எப்படி அவைத்தலைவர் பதவியை கொண்டு வரமுடியும்.
» புதிய வட்டம்: ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய மக்களின் கோரிக்கையை நிறைவெற்ற சீமான் வலியுறுத்தல்
» அந்தக் கால ஏ.ஆர்.ஆர். பாடிய இந்தப் பாடலை இப்படியும் பாட முடியுமா?
தேர்தல் ஆணையத்தை நாடியதாக வரும் செய்திகள் தவறு. தேர்தல் ஆணையத்திற்கே நாங்கள் செல்லவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு நாங்கள் சென்றதாக கூறுவது தவறான செய்தி. ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால், பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியும் என்பது உண்மைதான். கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் நடத்த முடியும். ஏனென்றால், அவைத்தலைவர் பதவி செல்லாது.
கட்சியின் பழைய விதியின்படி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்துவது என்றால், பொருளாளருக்குத்தான் அதற்கான அதிகாரம் உள்ளது. அப்படியென்றாலும் ஓ.பன்னீர்செல்வம்தான் கூட்டத்தை நடத்துவார்" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago