திருமங்கலம் சட்டப் பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட் பாளர் ஆர்.ஜெயராமனின் திட் டமிட்ட பிரச்சாரம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இத்தொகுதியில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்து வருகிறது.
மதுரை மாவட்டம், திரும ங்கலம் தொகுதி கடந்த 2009-ல் நடைபெற்ற இடைத்தேர் தலால் மிகப் பிரபலமானது. அப்போது வாக்காளர்களுக்கு கட்சிகள் போட்டி போட்டு பணப்பட்டுவாடா செய்ததால் ‘திருமங்கலம் பார்முலா’ என அடைமொழி பயன்படுத்தப்படுவது வாடிக் கையாகிவிட்டது.
வாக்களிக்கப் பணம் வழங்கு வதில் புதிய அத்தியாயத்தை எழுதிய திருமங்கலம் தொகுதியில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிமுகவில் அமை ச்சர் ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுவதால் மாநிலம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாகிவிட்டது.
மிக எளிதாக வெற்றி பெற்று விடுவோம் எனக் கருதினார் அமைச்சர். ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட் பாளராக ஆர்.ஜெயராமன் போட்டி யிடுவது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நல்லவர், எளிமையானவர், உள்ளூர்க்காரர், அனைத்துக் கட்சியினருக்கும் பரீட்சயமானவர் என்ற பல சாதக மான அம்சங்களுடன் ஜெயராமன் களத்தில் நிற்பது அதிமுகவினரை கலங்கடித்துள்ளது. அதிமுகவில் தொடர்ந்து வெளியூர் வேட்பா ளர்களே நிறுத்தப்படுகின்றனர் என்ற கருத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளார் உதயகுமார்.
இத்தொகுதியில் திருமங்கலம் நகர், ஒன்றியம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி ஒன்றியம், கல்லு ப்பட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. 1989, 1996 மற்றும் 2009 இடைத்தேர்தலில் திமுக வென்றது. 2006-ல் அதிமுக கூட்டணியில் மதிமுக வென்றது. 1977, 1991, 2001, 2011-ல் அதிமுக சார்பில் பி.டிசரஸ்வதி, டி.கே.ராதாகிருஷ்ணன், காளிமுத்து, முத்துராமலிங்கம் என வெற்றி பெற்ற அனைவரும் வெளியூர் வேட்பாளர்கள்.
அதிமுகவுக்கு பலமான வாக்கு வங்கி இத்தொகுதியில் எப்போதும் உள்ளது. இதில் கள்ளிக்குடி ஒன்றியம் அதிமுகவுக்கு மிக பலமாக இருப்பது மேலும் சாதக மானது. 2006-ல் திருமங்கலம் பகுதியில் திமுக அதிக வாக்குகள் பெற்றாலும், கள்ளிக்குடி பகுதி வாக்குகளால் மதிமுக வெற்றி பெற்றதை இன்றளவும் கட்சியினர் மறக்கவில்லை. ஆனால், தற்போது நிலைமை மாறி வருவதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். நடுநிலையாளர்கள், உள்ளூர் வர்த்தகர்கள், உறவினர்கள், நண்பர்கள் என திருமங்கலம் நகர், ஒன்றியத்தில் காங்கிரசுக்கு பரவலாக ஆதரவு காணப்படுகிறது. கள்ளிக்குடியில் அதிமுக வாக்கு களை கணிசமாக குறைத்தாலே தொகுதியை கைப்பற்றிவிடலாம் என கணக்குப்போட்டு காங்கிரஸில் வேலை நடக்கிறது.
டி.கல்லுப்பட்டி பகுதியில் திமுக மாவட்டச் செயலாளர் மணிமாறன் மூலம் சமமான அளவுக்கு வாக்குகளை பெற்றுவிட முடியும் என காங்கிரஸார் நம்புகின்றனர். ஆனால் உதய குமாருக்கு ஈடுகொடுத்து செலவிட முடியாமல் தவிக்கிறார் ஜெயராமன். திமுக சார்பில் மணிமாறன் திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுவதால், அவரது ஆதரவாளர்கள் அங்கு சென்று விட்டனர். பாஜக, தேமுதிக வேட்பாளர்களும் ஜெயராமனின் சமூகத்தினர் என்பதால், இவர்கள் பிரிக்கும் வாக்குகள் வெற்றியை நிர்ணயிப்பதாக அமையும்.
அதிமுக நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தி, கோஷ்டி பூசலைக் கடந்து உதயகுமார் தனது தேர்தல் அனுபவம், பக்குவமாக கையாளும் திறமையால் தொகுதி முழுவதும் சுற்றி வந்துவிட்டார். அமைச்சர், மாநில நிர்வாகி என்பதால் அதிமு கவினர் அடங்கிப்போய் தேர்தல் பணியாற்றுகின்றனர்.
காங்கிரஸ் வேட்பாளரின் நிலையை அறிந்து, உதயகுமார் காலில் விழுந்து வாக்கு கேட்பது முதல் அனைத்து பணிகளையும் தானே முன்னின்று செய்து வருகிறார். அதிமுகவினரை நம்பாமல் ஊர்வாரியாக வாக்குகளை தனியாக கணக்கெடுத்து களப் பணியாற்றுகிறார்.
கள்ளிக்குடி பகுதியில் எப்போதும் பெறும் அதிமுக வாக்குகளை பெறுவதில் ஆர்வம் காட்டுகிறார். மக்களிடம் எதிர்ப்பு இல்லாததை சாதகமாக பயன்படுத்தி வருகிறார். இவரு க்காக நடிகர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் தொடர்ந்து வலம் வருகின்றனர். முக்குலத்தோரின் வாக்குகள், வாக்காளர்கள் கவ னிப்புகளால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago