தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளியைக் கொண்டாடுவது வழக்கம்.

இதற்காக, ரயில்களில் செல்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதன்படி, ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி இணைய தளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதால், முன்னதாக வெள்ளிக்கிழமையே (அக்.21) மக்கள் சொந்த ஊர் செல்ல ஆர்வமாக இருப்பார்கள். எனவே, அக்.21-ம் தேதி வெள்ளிக்கிழமைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஜூன் 23)காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. அக்.22-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளையும், அக்.23-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்க உள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தீபாவளி பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு செல்வோரின் வசதிக்காக, டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணி தொடங்குகிறது. ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள், ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்