சென்னை: "10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவு செய்திருப்பதும் கண்டனத்திற்குரியது" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடும்போது பாடங்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடாததும், தமிழ் மொழிப்பாடத்தை வெறுமனே மொழிப்பாடமென்று மட்டும் பதிவு செய்திருப்பதும் கண்டனத்திற்குரியது.
‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்’ எனும் முழக்கத்தை முன்வைத்து ஆட்சியதிகாரத்துக்கு வந்த திராவிட ஆட்சியாளர்கள், தமிழை வளர்க்கும் லட்சணம் இதுதான். தமிழைப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிப்பதுதான் இவர்களது திராவிட மாடல் ஆட்சி, வெட்கக்கேடு" என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago