திருப்பத்தூர்: மேல்நிலை தேர்வை சந்தித்த முதல் ஆண்டிலேயே 97 சதவீதம் தேர்ச்சிப்பெற்று வனத்துறைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
தமிழக வனத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 20 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 பள்ளிகளும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 பள்ளிகளும், வேலூர் மாவட்டத்தில் ஒரு பள்ளியும், பொள்ளாச்சியில் 1 பள்ளி என மொத்தம் 20 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இதில், திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட நெல்லிவாசல் நாடு ஊராட்சியில் கடந்த 1952-ம் ஆண்டு தொடக் கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து, 1990-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, 2005-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.
உயர்நிலை கல்வி முடிந்து மேல்நிலை கல்வி பெற வேண்டு மென்றால் இப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 16 கி.மீ., தொலைவுள்ள புதூர்நாடு ஊராட்சிக்கும், சுமார் 29 கி.மீ., தொலைவுள்ள திருப்பத்தூர் நகர் பகுதிக்கும் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, நெல்லிவாசல் நாடு உயர்நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என கடந்த 16 ஆண் டுகளாக மலைவாழ் மக்களும், மாணவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டு நெல்லிவாசல் நாடு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு, 2022-ம் ஆண்டில் முதல் முறையாக பிளஸ் 2 தேர்வை நெல்லிவாசல் நாடு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எதிர்கொண்டனர்.
இதில், தேர்வு எழுதிய ஒரு மாணவரை தவிர மற்ற அனைத்து மாணவர்களும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப்பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர். இப்பள்ளியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத போதே நெல்லிவாசல் நாடு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் இந்த சாதனையை எட்டியுள்ளதை தொடர்ந்து பொதுமக்கள், பெற் றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரகுமார் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் நெல்லிவாசல் நாடு ஊராட்சியில் உள்ள வனத்துறை மேல்நிலைப்பள்ளி பழமை வாய்ந்த பள்ளியாகும்.
இந்தப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக அரசு பொது தேர்வில் 100 சதவீதம்தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மேல்நிலை கல்வி தொடங்கப்பட்டது. அதில், 28 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வை சந்தித்தனர். பிளஸ் 2 பொது தேர்வை சந்தித்த முதல் ஆண்டிலேயே 28 மாணவர்களில் 27 பேர் தேர்ச்சிப்பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எங்கள் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் உள்ளிட்ட ஒரு சில வசதிகள் இல்லை. இருந்தாலும் எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் 16 கி.மீ., தொலைவில் உள்ள புதூர்நாடு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று அங்கு அறிவியல் ஆய் வகத்தில் செயற்முறை தேர்வை எதிர்கொண்டனர்.
கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து மாணவர்கள் அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எங்கள் பள்ளியில் 20 ஆசிரியர்கள் தேவை. ஆனால், 15 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
வனத்துறைப்பள்ளியில் 12 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
மாணவர்களுக்கு தேவையான கல்வி வசதிகளை மேம்படுத்தித் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வரு கிறோம். வனத்துறை பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்தால் அடுத்த ஆண்டு அரசு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சியை எட்டுவோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago