பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சொத்து எங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்று லெக்ஸ் பிராபர்டீஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதன் மீதான விசாரணை முடியும்வரை சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்குக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த தடை ஜூன் 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தடையை நீக்கக் கோரி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், சிவ கீர்த்தி சிங் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை வந்தது. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்கறிஞர் அம்ரீந்தர் சரண் ஆஜரானார்.
ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்தே, ‘வழக்கில் முடக்கப்பட்டுள்ள சொத்துகளை தங்களது சொத்துகள் என்று சில நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. அந்த நிறுவனங்களை பிரதிவாதியாக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் பெங்களூர் நீதிமன்றம் அந்த உத்தரவை செயல்படுத்த வில்லை. இது நீதிமன்ற அவமதிப் பாகும். சென்னை உயர் நீதிமன்றத் தின் உத்தரவு சொத்துக்குவிப்பு வழக்கின் அடிப்படையையே மாற் றக் கூடிய உத்தரவு. அந்த உத்த ரவை மதிக்காதது சட்ட மீறல்,’ என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள் தங்கள் உத்த ரவில், ‘ஜெயலலிதா தாக்கல் செய் துள்ள மனுவை ஏற்க எந்த முகாந்திர மும் இல்லை. மனு தள்ளுபடி செய் யப்படுகிறது’ என தெரிவித்தனர்.
சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
இதனிடையே ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நீக்கியதால்,அவரது தரப்பு வழக்கறிஞர்கள் இறுதிவாதத்தை ஜூன் 19-ம் தேதி முதல் தொடங்க வேண்டும் என பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தரவிட்டார்.
அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் இறுதிவாதம் முடிந்துள்ளதால்,அடுத்ததாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தங்களுடைய இறுதிவாதத்தை ஜூன் 19-ம் தேதி முதல் தொடங்க வேண்டும். அதனைத் தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரின் வழக்கறிஞர்களும் தங்களுடைய இறுதிவாதத்தை தொடங்க வேண்டும்''என உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago