'குழந்தைகளுக்கு தோல்வியை பழக்கப்படுத்த வேண்டும்' - மனநல மருத்துவர் 

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்: குழந்தைகள் கேட்டவுடன் பெற்றோர்கள் எதையும் உடனடியாக வாங்கிக் கொடுக்கக்கூடாது, ஒருமுறைக்கு பலமுறை கேட்ட பின்பு வாங்கிக் கொடுக்க வேண்டும், அப்படி வாங்கிக்கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட நேர்ந்தது என்பதை சொல்லித் தர வேண்டும் அப்போது தான் தோல்வி பழகும் என்று மனநல மருத்துவர் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று வெளியிடப்பட்ட ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பின் 2 மாணவிகள், 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் 5 மாணவ, மாணவியர்கள் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இப்படிப்பட்ட விபரீத முடிவுக்கு வருவதற்கு என்ன காரணம் என சமூக ஆர்வலர்களிடம் கேட்டபோது, முன்பெல்லாம் மாணவர்களிடம் மொபைல் போன் பயன்பாடு குறைவாக இருந்தது. தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்காக ஒவ்வொரு மாணவரும் மொபைல் உபயோகின்றனர்.

வகுப்பு நேரம் போக மற்ற நேரங்களில் சமூக வலைதளங்களில் மூழ்குகின்றனர். அருகில் உள்ள உறவுகளிடம் பேசாமல், எங்கோ முகம் தெரியாத ஒருவரிடம் ச்சாட் செய்து பேசுகின்றனர். எதிர்முனையில் உள்ளவர்களின் வழிகாட்டுதல் வேதவாக்காக எண்ணுகின்றனர். இதுதான் கடந்த காலங்களில் "ப்ளு வேல்" (Blue Whale) என்ற பெயரில் உலகை உலுக்கியது.

மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மட்டுமல்ல ஆசிரியர்கள், நண்பர்களுக்கும் இடையே இடைவெளி அதிகமாகிவிட்டது. ரிசல்ட் பார்க்க தெரியவில்லை. ரிசல்ட்டை முழுமையாக உள்வாங்காமல், அந்த கண விநாடியில் தோன்றுவதை அதாவது குறைவான மதிப்பெண், தேர்ச்சியை தோல்வி என எண்ணுவது போன்ற காரணிகளும் இதில் அடங்கும். முதலில் தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது, பெற்றோர் தன் குழந்தைகளுகளிடம் எப்படி பேசுவது என சொல்லி தரவேண்டியது அவசியமாகிறது. வெப் சீரியஸ், யூ டியூப் சேனல்கள் போன்றவற்றுக்கு சென்சார் அவசியமாகிறது என்றனர்.

மேலும் இது குறித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மனநல மருத்துவர் மணிகண்டன் கூறியதாவது: "பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும்போது வாழ்வின் நிறை, குறைகளை சொல்லி வளர்க்கவேண்டும். மகாத்மா காந்தி, நெல்சன் மாண்டலே, புத்தர் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்லி தரவேண்டும். அதிகம் படிக்காமல் வாழ்வில் வெற்றி பெற்ற நமது முதல்வர், திரைப்பட நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், மகேந்திரசிங் தோனி போன்றவர்களை உதாரணப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு குழந்தையும் 14 வயதுக்குமேல் சுயமாக சிந்தித்து, முடிவெடுக்கிறார்கள் அப்போது பெற்றோர்கள் குழந்தைகள் எதிரில் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும். அதிக செல்லமும், அதிக கண்டிப்பும் கூடாது. கேட்டவுடன் எதையும் வாங்கி கொடுக்கக் கூடாது. ஒருமுறைக்கு பலமுறை கேட்ட பின்பு வாங்கிகொடுக்கவேண்டும். அப்படி வாங்கிகொடுக்க எவ்வளவு கஷ்டப்பட நேர்ந்தது என்பதை சொல்லி தரவேண்டும். அப்போதுதான் தோல்வி பழகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து ஆட்சியர் மோகன் கூறியதாவது: "மாணவர்களுக்கு நீதிவகுப்புகள் நடத்துவதை கண்காணிக்கவும், தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது என்பது கற்று தரவும், தங்களின் குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என மாணவர்களின் பெற்றொர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆட்சியர் மோகன் கூறினார்.

ஆண்கள் உடல் உறுதியிலும், பெண்கள் மன உறுதியிலும் பலமானவர்கள் என்கிறது மனோதத்துவம். தற்போதைய நடைமுறை வாழ்வில் பெண்களை விட ஆண்களே அதிக அளவில் தற்கொலைக்கு முயல்கிறார்கள். இந்தியாவில் இப்படி நான்கு நிமிடத்துக்கு ஒரு தற்கொலை நடைபெறுகிறது என்கிறது புள்ளிவிவரம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்