கரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்: மக்களுக்கு மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் கரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 306 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி 1,697 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் பொதுமக்கள் கரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் சளி போன்ற கரோனா தொடர்பான அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களை தெரியப்படுத்த தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கெனவே கடிதம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 448 தனியார் மருத்துவமனைகள் மற்றும் பொது சிகிச்சை மையங்கள் சார்பில் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன.

19-ம் தேதி தனியார் மருத்துவமனைகளில் இருந்து காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை பெற்ற 227 பேரின் விவரம் பெறப்பட்டுள்ளது. இவற்றில் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து மிகக் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் விவரங்கள் பெறப்படுகின்றன.

இந்த மண்டலங்களைச் சார்ந்த பூச்சியில் வல்லுநர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு செய்து விவரங்களைப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்