புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை கீழ் அக்ரஹாரம் பகுதியில் ஏராளமான சிமெண்ட் சீட்டு போடப்பட்ட கூரை வீடுகள் உள்ளன.
வீட்டுக்கு அருகே உள்ள மின்கம்பங்களில் சில மின்கம்பிகள் தாழ்வாக சென்றுள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் நேற்று ஒரு வீட்டில் மின்கம்பி அறுந்து விழுந்தது.
அந்த வீட்டில் இருந்த செல்வி (60), அவரது மகன் கணேசன் (22), மகள் சரண்யா மற்றும் செல்வியின் சகோதரி தேன்மொழி (46) ஆகியோர் காயமடைந்தனர்.
உடனே அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அவர்களை மீட்க அப்பகுதி மக்கள் முயன்றனர். ஆனால் கணேசன், தேன்மொழி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மூச்சின்றி கிடந்தனர்.
மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். செல்வி, அவரது மகள் சரண்யா ஆகியோர் காயங்களுடன் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையறிந்து அப்பகுதி மக்கள் முத்தியால்பேட்டையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், “தாழ்வாக சென்ற மின்கம்பி குறித்து மின்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மின்துறை அலட்சியத்தால் இருவரும்உயிரிழந்துள்ளனர்” என்று குற்றம்சாட்டினர். தகவலறிந்த முத்தியால்பேட்டை போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago