சென்னை: நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கும் அக்னி பாதை திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத்திற்கு வீரர்களை சேர்ப்பதில் 'அக்னி பாதை' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 14.06.2022 ஆம் தேதி அறிவித்தது. அறிவிப்பு வெளியானதும் நாடு முழுவதும் இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். வடமாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அக்னி பாதை திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல என்று கூறும் துறை சார்ந்த வல்லுநர்களும், முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள உயர்நிலை அலுவலர்களும், அக்னி பாதை திட்டம் நாட்டின் பாதுகாப்பை ஊனப்படுத்தும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி வலியுறுத்தி வருகின்றனர்.
ராணுவ அமைப்பில் மாநிலங்கள் வகித்து வரும் சமநிலையை கடுமையாக பாதிக்கும். குறுகிய கண்ணோட்டம் கொண்டவர்கள் ஊடுருவ வாய்ப்பளிக்கும் என புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராணுவத் தளபதிகளுடன் திரும்பத் திரும்ப ஆலோசித்து வருகிறார். முன்னர் வெளியிட்ட அறிவிப்பில் தளர்வு செய்து அக்னி பாதை திட்டத்தை செயல்படுத்துவதாக மீண்டும் மீண்டும் அறிவிப்பது போராடுபவர்களை ஆத்திரமூட்டி வருகிறது.
ஓய்வு பெற்ற ராணுவத்தினர், ஒரு நிலை, ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராடி வந்தபோது, நரேந்திர மோடி அதனை ஆதரித்து பேசியதை நாடு மறந்துவிடவில்லை. இப்போது அக்னி பாதை திட்டத்தில் சேர்க்கப்படும் 'அக்னி வீர்ர்'களுக்கு ஓய்வூதியம் என்ற அறிவிப்புக்கு மௌன சாட்சியாக இருந்து வருகிறார்.
நாட்டின் பாதுகாப்பில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கும் அக்னி பாதை திட்டத்தை முற்றாக திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது'' என்று முத்தரன் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago