10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அறிவியல் பாடத்தில் 3481 பேர் சதம்

By செய்திப்பிரிவு

சென்னை: 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், அறிவியல் பாடத்தில் 3481 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேர். இதில் மாணவியரின் எண்ணிக்கை 4 லட்சத்து 32 ஆயிரத்து 439 , மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 , மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். இதில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர், கிட்டத்தட்ட 90.07 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றவர்கள்.

இதில் மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர், 94.38 சதவீதம். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920, 85.83 சதவீதம் பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

அறிவியல் பாடத்தில் அதிகம்: 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் பாடத்தில் ஒருவரும், ஆங்கிலத்தில் 45 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

கணிதப் பாடத்தில் 2186 பேரும், அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 3841 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 1009 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE