வீட்டின் தாழ்வாரத்தில் வாடகைக்கு இயங்கி வரும் முடிகொண்டான் அங்கன்வாடிக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்: குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்தல்

By பெ.பாரதி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த முடிகொண்டானில் வாடகைக்கு வீட்டின் தாழ்வாரத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரும்நிலையில், அரசுப் பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று குழந்தைகளின் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

முடிகொண்டானில் சமையலறையுடன் கூடிய அங்கன்வாடி மையம், 1994, ஜன.22-ம் தேதி அன்று அப்போதைய முதல்வர்ஜெயலலிதாவால் கரூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியின்போது திறந்து வைக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கட்டிடத்தின் மேற்கூரையின் உள்பரப்பில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழத் தொடங்கின. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தக் கட்டிடம் மூடப்பட்டு, அதே பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வீட்டின் தாழ்வாரத்தில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் ஓராண்டாக வாடகைக்குச் செயல்பட்டு வருகிறது.

தற்போது, இந்த அங்கன்வாடி மையத்தில் முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் 25 பேர் பயின்று வருகின்றனர். மழைக் காலங்களில் இந்த இடம் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்காது என்றும், குழந்தைகளின் நலனைக் கருதி அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “தற்போது அங்கன்வாடிமையம் செயல்பட்டு வரும் வீட்டின்தாழ்வாரத்தில் குழந்தைகள் அமர்வதற்குக் கூட போதிய இடவசதி இல்லை. தெருவோரத்தில்தான் விளையாடுகின்றனர். மழைக் காலங்களில் இந்த இடம் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்காது. மேலும், பள்ளி வளாகத்தில் போதியஇடம் உள்ளது. எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் கட்டித் தர வேண்டும்” என்றனர்.

இதுகுறித்து திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜிடம் கேட்டபோது அவர் கூறியது: முடிகொண்டான் அங்கன்வாடி மையம் சேதமடைந்துள்ளது குறித்து கவனத்துக்கு வந்துள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், புதிய கட்டிடம் கட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்