சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை | சமூக வலைதளங்களில் படங்களை பகிர்ந்த நெட்டிசன்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அது குறித்த தகவலை ட்விட்டர் தளத்தில் பகிர்ந்து ட்ரெண்ட் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்து வரும் நாட்களுக்கு மழை பொழிவு இருக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக 19-ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும். ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சொல்லப்பட்டிருந்தது. அதன்படி தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

மழை குறித்த தகவலை படங்களாகவும், வீடியோவாகவும் ட்விட்டர் தளத்தில் #chennairains என்ற ஹாஷ்டேக் உடன் பகிர்ந்து ட்ரெண்ட் செய்துள்ளனர். வேளச்சேரி, முகப்பேர், ஓ.எம்.ஆர், பட்டினப்பாக்கம், கிரீன்வேஸ் சாலை, அண்ணா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆலப்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளதாக ட்விட்டர் பயனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

"சென்னை குளிர்ந்து, நிச்சயம் இந்த மழை இப்போது அவசியம், இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை" என ட்விட்டர் பயனர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்