சென்னை | ‘ஸ்டாப் லைன்’ கடந்து வாகனம் நிறுத்திய 6,037 பேர் மீது வழக்கு

By செய்திப்பிரிவு

சென்னையில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் வகையில் ‘ஸ்டாப் லைன்’ கடந்து வாகனம் நிறுத்திய 6,037 பேர் மீது போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னையில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் வகையில் போக்குவரத்து போலீஸார் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சிக்னலில் போடப்பட்டிருக்கும் வாகன நிறுத்த கோட்டில்(ஸ்டாப் லைன்) வாகனங்களை நிறுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 16 மற்றும் 17-ம் தேதிகளில் போக்குவரத்து போலீஸாரால் சிறப்பு இயக்கம் சென்னைமுழுவதும் நடத்தப்பட்டது.

அபராதம் விதித்து விழிப்புணர்வு

அப்போது, வாகன நிறுத்த கோட்டை தாண்டி வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன. அதன்படி, 2 நாளில்மட்டும் 6 ஆயிரத்து 37 வழக்குகள் சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சாலை விதிமீறல்கள் செய்பவர்களை புகைப்படம் எடுத்து, செல்போன் எண்ணுக்கு அபராத ரசீதுகளை அனுப்பியும், சிலருக்கு அதே இடத்திலேயே அபராதம் விதித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்