ராமேசுவரத்தில் இருந்து மதுரை, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

By செய்திப்பிரிவு

மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராமேசுவரம்-மதுரை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் கள் ஜூன் 22 முதல் இயக் கப்படவிருக்கிறது. அதன்படி சிறப்பு ரயில் (06652) ராமேசு வரத்திலிருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.40 மணிக்கு மதுரை வரும்.மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.10 மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

ராமேசுவரம்-கன்னியாகுமரி வாரம் மும்முறை அதிவிரைவு ரயில்கள் ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 27-ம் தேதியிலிருந்தும், கன்னியாகுமரியிலிருந்து ஜூன் 28-ம் தேதியிலிருந்தும் இயக் கப்படவிருக்கிறது. அதன்படி ராமேசுவரம்-கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் (22621) ராமேசுவரத்திலிருந்து திங்கள், புதன், சனிக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15-க்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறுமார்க்கத்தில் அதிவிரைவு ரயில் (22622) கன்னியாகுமரியிலிருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.35 மணிக்கு ராமேசுவரம் வரும்.

இந்த ரயிலில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி, 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE