கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் அமைக் கப்பட்ட 85 கண்காணிப்பு கேமராக் களில் 64 கேமராக்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன.
கள்ளக்குறிச்சி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் நடை பெறும் குற்ற சம்பவங்களையும், வெளியூர் குற்றவாளிகளின் ஊடுருவலை தடுப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிப்பது சிசிடிவி கேமராக்கள். அதனடிப்படையில் கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள முக்கிய பகுதிகள் மற்றும் நகரத்தைஒட்டிய புறநகர் பகுதிகள் எனமொத்தம் 85 இடங்களில் காவல்துறை மூலம் சில அமைப்புகளின் உதவியோடு சிசிடிவி கேமராக்களை பொருத்தியது. இதற்காக கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு துல்லியமாக கண்காணிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக கள்ளக்குறிச்சி பகுதியில் அமைக்கப் பட்டுள்ள 85 சிசிடிவி கேமராக்களில் 64 சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளன. அவைகளின் ஒயர்கள் அருந்தும், கேமரா பொருத்தப்பட்ட கம்பங்கள் சாய்ந்தும், சேத மடைந்தும் உள்ளன. கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் உள்ள டிவியை பார்த்தாலே, குறிப்பிட்ட சில சிசிடிவி கேமராக்கள் மட்டும் இயங்குவது தெரியும். மற்ற சிசிடிவி கேமராக்கள் இயங்காததால் ஒரு டிவி அணைத்து வைக்கப்பட்டும், மற்றொரு டிவியில் பாதி அளவு மட்டுமே வீடியோக்கள் ஒளிபரப்பாகின்றன.
கண்காணிப்பு கேமராக்கள்இயங்காததால், அவ்வப்போதுநிகழும் குற்றச் சம்பவங்கள் கண்டறிவதில் காவல்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்களை உறுதி செய்ய முடியாமலும், இந்தக் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் குறித்த தகவல் களை சேகரிப்பதிலும் தொய்வு ஏற்படுவதாகவும், இதனால் குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் காவலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குற்றச்சம்பவங்களை கண் காணிக்கும் மூன்றாவது கண்ணாக இருக்கும் சிசிடிவி கேமராக்களை காவல்துறை உடனடியாக சரி செய்யும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமாரிடம் கேட்டபோது, "ஒரு சில இடங்களில் கேமரா பழுதுஏற்பட்டிருக்கலாம்.
இருப்பினும் இதுகுறித்து சுட்டிக்காட்டப்பட்டதால், அனைத் துக் கேமராக்களும் ஆய்வு செய்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago