கட்சியை விட்டு நீக்கப்பட்டதற்கான அறிவிப்பு கடிதம் வரவில்லை: மு.க.அழகிரி

By செய்திப்பிரிவு

திமுகவிலிருந்து நீக்கப்பட்டதற் கான அறிவிப்பு கடிதம் இன்னும் எனக்கு வரவில்லை என்றார் மு.க.அழகிரி.

தஞ்சையிலிருந்து மதுரை செல் லும் வழியில் திருச்சியில் ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த மு.க. அழகிரி சென்றதை அறிந்து திருச்சி செய்தியாளர்கள் அங்கே ஆஜராகினர். உணவருந்திவிட்டு புறப்படத் தயாரான அவர் சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்து விட்டுப் பறந்தார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திருச்சியில் திமுக வெற்றி பெறுமா என எனக்கு எப்படித் தெரி யும். நான்தான் திமுக-விலேயே இல்லையே. என்னை திமுகவிலி ருந்து நீக்கியது பற்றிய முறையான அறிவிப்பு இன்னும் எனக்கு வர வில்லை.

வைகோ, எம்.ஜி.ஆர் ஆகி யோரைக் கட்சியிலிருந்து நீக்கிய போது முறைப்படி அவர்களுக்கு எழுத்துப் பூர்வமான கடிதம் அனுப் பினார்கள். எனக்கு இதுவரை அப்படியொரு கடிதம் வரவில்லை. கடிதம் வந்தால்தான் நான் அதை எதிர்த்து வழக்கு தொடருவது பற்றி முடிவு செய்ய முடியும்.

திமுக-விலிருந்து என்னை நீக்கி யவர்கள் எம்.பி-க்கள் ரித்தீஷ், நெப் போலியன் ஆகியோரை ஏன் நீக்க வில்லை என திமுக-வினரிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்