திண்டிவனத்தில் அமைச்சர் எ.வ.வேலுவை வரவேற்று நெடுஞ்சாலையின் நடுவில் வரவேற்பு வளைவுகள்

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: திண்டிவனத்தில் மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவை வரவேற்று, நெடுஞ்சாலையின் நடுவிலேயே திமுகவினரால் வரவேற்பு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. அவற்றை போலீஸார் அகற்றினர்.

திண்டிவனத்தில் நேற்று இரவு நடந்த திமுக பிரமுகர் இல்ல விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் எ.வ.வேலுவை வரவேற்று, திண்டிவனத்தில் நெடுஞ்சாலையில் சுமார் 1 கி.மீ தூரத்துக்கு சாலையின் இரு புறத்திலும் திமுக கொடி கம்பங்களை அமைத்திருந்தனர்.

குறிப்பாக நெடுஞ்சாலையின் நடுவிலேயே அலங்கார வளைவுகளை அமைத்தும் திமுகவினர் வரவேற்பு ஏற்பாடுகளை செய்தனர். இது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. இதுகுறித்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின.

இதையடுத்து விழுப்புரம் எஸ்பி நாதா உத்தரவின் பேரில், போலீஸார் வரவேற்பு அலங்கார வளைவுகளை அகற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்