மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை, போட்டி ஒருங்கிணைப்பு சிறப்பு அலுவலர் சங்கர் நேற்று ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28 முதல் ஆக. 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில், 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உட்பட 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இதில், போட்டி நடைபெற உள்ள சொகுசு விடுதியை ஒட்டியுள்ள, தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலபரப்பில், வாகன நிறுத்துமிடம், கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
அதிகாரிகளுக்கு அறிவுரை
இதனால், இப்பகுதியில் நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை போட்டி ஒருங்கிணைப்பு சிறப்பு அலுவலர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago