சென்னை: முதல்வர் தலைமையில் திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு ஜூலை 3ம் தேதி நாமக்கலில் நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி வெற்றது. வெற்றிவர்கள் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் "உள்ளாட்சியிலும் நல்லாட்சி" என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 3 ஆம் தேதி நாமக்கலில் "நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு" நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பொறுப்பேற்றுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு, கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில், கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 3ம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 5 மணிவரை நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, பொம்மகுட்டை, நாமக்கல்லில் நடைபெறும்.
இந்த மாநாட்டில், பல்வேறு தலைப்புகளின்கீழ் பேச்சாளர்கள் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். கழகத்தின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர், துணை மேயர் - நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் - பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் - நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் இணைக்கப்பட்டுள்ள அனுமதி பேட்ஜ் பெற்று, இம்மாநாட்டில் தவறாது கலந்துகொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago