அட்சய திரிதியையை முன்னிட்டு ‘லைட் வெயிட்’ நகைகள் உட்பட நூற்றுக்கணக்கான புதிய வகை நகைகளுடன் வாடிக்கையாளர்களைக் கவர வியாபாரிகள் தயாராகி வருகின்றனர். வழக்கமான வர்த்தகத்தை காட்டிலும் 400 முதல் 500 சதவீதம் வரை விற்பனையை அதிகரிக்க நகைக்கடை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
அட்சய திரிதியை தினத்தன்று தங்கம் வாங்கினால், குடும்பத்தில் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அட்சய திரிதியை தினத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நகைக்கடை நிறுவனங்கள் பல்வேறு சலுகை களை அறிவிக்கின்றன. இதனால், அன்றைய தினம் நகை வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிக ரித்து வருகிறது. நாளை (9-ம் தேதி) அட்சய திரிதியை வருகிறது. இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுசெயலாளர் எஸ்.சாந்தகுமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
அட்சய திரிதியை தினத் தன்று பொதுமக்கள் நகை மற்றும் பொருட்களை வாங்க விரும்புவார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் நகைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். கடவுள் படம், மயில், தாமரை, அன்னபறவை உள்ளிட்ட டிசைன்களில் தயாரிக்கும் பாராம்பரிய தங்க நகைகளுக்கு எப்போதும் வரவேற்பு இருக் கிறது. தற்போதுள்ள பெண்கள் ரும்பாலும் லைட் வெயிட் நகை களை விரும்பி அணிகிறார்கள். அதனால் அந்த வகை நகைகள் அதிகமாக தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக சோலாப்பூர் நெக்லஸ், கேரளா ஆரம், செயின், வளையல்கள், மூக்குத்தி ஆகியவை நூற்றுக்கும் மேற்பட்ட டிசைன்களில் தயாரிக்கப்படுகிறது.
அட்சய திரிதியை 8-ம் தேதி (இன்று) மாலை 5.51 மணிக்கு தொடங்கி 9-ம் தேதி முழுவதும் இருக்கிறது. எனவே, இந்த நேரத்தில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கடைகளில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். குறிப்பாக திருட்டுகளை தடுக்க கடைகளில் கண்காணிப்பு கேமிராக்களை அதிகரித்துள்ளோம். சிறப்பு கவுண்டர்களை திறப்பதுடன் கூடுதல் பணியாளர்களையும் நியமித்துள்ளோம். இந்த அட்சய திரிதியையில் வழக்கமான வர்த்தகத்தை காட்டிலும் 400 முதல் 500 சதவீதம் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
குபேர ஹோமம்
அட்சய திரிதியை நாளில் மகாலட்சுமியை வணங்குவோர்க்கு சகலமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதையொட்டி, உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அனைத்து நலனும் பெற்று சிறக்க வேண்டும் என்ற நோக்குடன், சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் சிறப்பு லட்சுமி குபேர ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படவுள்ளது.
இந்த ஹோமம் அட்சய திரிதியை அன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை நடத்தப்படவுள்ளது. ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்படுகிற பொருட்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். அன்றைய நாளில் லட்சுமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்து தரிசனம் செய்யப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago