கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதள வசதி: தமிழக அரசு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதள வசதி மற்றும் சக்கர நாற்காலி வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

48 முதுநிலைத் திருக்கோயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்வுத்தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் வசதி ஏற்படுத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்துவது தொடர்பாக முதுநிலை திருக்கோயில்களில் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கண்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், "முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் திருக்கோயில்களில் சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தினை பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும். திருக்கோயில் நுழைவு வாயில் அருகில் குறைந்தபட்சம் 5 சக்கர நாற்காலிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். திருக்கோயில்களில் இதற்காக தனியாக ஒரு பணியாளர் பொறுப்பில் இருக்க வேண்டும்க்கர நாற்காலியில் வருபவர்கள் எளிதில் தரிசனம் செய்யும் வகையில் தேவையான இடங்களில் மரப்பலகையிலான சாய்வுத்தளங்கள் அமைக்கப்பட வேண்டும்" இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE