அங்கன்வாடிக்கு ஒதுக்கிய இடத்தில் கோயில் கட்ட அனுமதி வழங்கியது எப்படி? - குமரி ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

மதுரை: அங்கன்வாடி மையம் கட்டுவதற் காக ஒதுக்கிய இடத்தில் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது எப்படி? என குமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவிதாங் கோடு பகுதியைச் சேர்ந்த குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருவிதாங்கோடு அண்ணாநகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதியில் அங்கன் வாடி கட்டிடம் கட்ட 5 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் விநாயகர் கோயில் கட்டுவதற்கு சிலர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

அங்கன்வாடி கட்டிடம் கட்டினால் பொதுமக்கள், குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும். எனவே விநாயகர் கோயில் கட்டுவதற்காக ஆக்கிர மிக்கப்பட்டுள்ள பகுதியை மீட்டு அந்த இடத்தில் அங்கன்வாடி கட்ட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கிய இடத்தில் அங்கன்வாடி கட்டாதது ஏன்? அந்த இடத்தில் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது எப்படி? என்பது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 20-க்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்