சென்னை: சென்னை ஆதித்தனார் பாலத்தில் சிறிய பள்ளம் விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சாலையின் ஒருச்பகுதியில் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
சென்னை புதுபேட்டை மற்றும் அண்ணா சாலையை இணைக்கும் ஆதித்தனார் பாலம் லேங்க்ஸ் கார்டன் சாலை அருகில் உள்ளது. இந்த பாலம் 130 ஆண்டுகள் பழமையானது. இந்நிலையில் இன்று காலை இந்த பாலம் வழியாக காவல் துறையினர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது அண்ணா சாலையில் இருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் பாலத்தில் சிறிய பள்ளம் இருப்பதை கண்டுபிடித்தனர்.
உடனடியாக அந்தப் பகுதியில் தடுப்புகளை அமைத்து ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதி அளித்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதன்பிறகு மாநகராட்சி பொறியாளர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
» திருவாரூர் | அரசு மருத்துவமனையில் இளம் பெண் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு
» ஆண்டுக்கு 50,000 இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
கடந்த சில மாதங்களாக சென்னையில் சாலைகளில் பள்ளம் விழுந்து வருவது தொடர் கதையாகி வருகிறது. ஆனால் தற்போது பாலத்தில் சிறய அளவில் பள்ளம் விழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago