திருச்சி: தமிழகத்தில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால், உண்மையான எதிர்க்கட்சியாக பாமகதான் செயல்படுகிறது என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், மேகேதாட்டு அணை தொடர்பான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு விவாதிக்க திட்டமிட்டுள்ளது. இது சட்டத்துக்கும், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கும் எதிரானது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்.
சில கட்சிகள் சூழ்ச்சி செய்துமக்களைப் பிரித்துக் கொண்டுள்ளன. அது தவறு. வளர்ச்சி என்ற அடிப்படையில் மக்களை இணைக்க வேண்டும். குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து கட்சி உயர்நிலை குழு முடிவு செய்யும்.
தமிழகத்தில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. ஆனால், பிரச்சினைக்கு போராடி பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கையில் உண்மையான எதிர்க்கட்சியாக பாமக உள்ளது. அதிமுக, திமுக ஆகிய இரு ஆட்சிகளும் ஒன்றுதான். தலைவர்கள்தான் வேறுவேறாக உள்ளனர் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago