மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயில் ஊழியர்களுக்கு 2 மாதமாக ஊதியம் வழங்கவில்லை

By செய்திப்பிரிவு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தல சயன பெருமாள் கோயில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் 7 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. போதிய வருவாய் இல்லாததால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே இந்த கோயிலில் அன்னதானம் வழங்கும்போது பாகுபாடு செய்யப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதன் காரணமாக சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து புதியதாக பொறுப்பேற்றுள்ள செயல் அலுவலர் சக்திவேலிடம் கேட்டபோது, “புகழ்பெற்ற கோயில் என்றாலும் கோயிலுக்கு போதிய வருவாய் இல்லை. இதனால், இரண்டு மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்