மதுரை: தமிழகத்தில் எஸ்சி, மாணவர் திட்டங்களுக்கு தனி வலை தளத்தை விரைவில் உருவாக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கார்த்திக், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதி செலவிடப்படாமல் அரசுக்கே திருப்பி அனுப்பப்படுகிறது.
இதுதொடர்பாக தகவல் சேகரித்தபோது 8 ஆண்டுகளில் வெளிநாடுகளில் எஸ்சி, எஸ்டி மாணவர்கள் பி.எச்டி., படிப்ப தற்கான நிதி உதவித் திட்டத்தில் 3 பேர் மட்டும் தேர்வாகி ரூ.2.65 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு ஒதுக்கிய நிதி யில் ரூ.99 லட்சம் அரசிடமே திரும்ப வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களுக்காக அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.927 கோடி பயன்படுத்தப்படாமல் திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை அரசிடமிருந்து மீண்டும் பெற்று எஸ்சி, எஸ்டி மாணவர்களின் உயர் கல்விக்குப் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.
இந்த மனு நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘எஸ்.டி. பிரிவினருக்கான திட்டங்களின் தகவல்களைத் தெரிவிக்க தனி வலைதளம் உள்ளது.
இதேபோல் ஆதி திராவிடர்களுக்கான திட்டங்களை தெரிவிக்க தனி வலைதளம் உருவாக்கப்படும். பள்ளிகளில் எஸ்.சி., எஸ்.டி.யினருக்கான நலத்திட்டங்கள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், தனி வலைதளம் உருவாக்கும் பணியை விரைவில் மேற்கொள்ள உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago