சென்னை: " கொடுங்கையூர் போன்ற தொடர் லாக் அப் மரணங்கள், சட்டம் ஒழுங்கு பற்றி முதல்வர் அவ்வப்போது ஆய்வு நடத்துவதாக வரும் செய்திகள் வெற்று விளம்பரத்திற்காகத்தானோ என்று நினைக்க வைக்கிறது " என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"சென்னை கொடுங்கையூரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் போலீஸ் காவலில் இருக்கும்போது தாக்கப்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பற்றி முதல்வர் அவ்வப்போது ஆய்வு நடத்துவதாக வரும் செய்திகள் வெற்று விளம்பரத்திற்காகத்தானோ என்று நினைக்க வைக்கிறது இது போன்ற தொடர் லாக் அப் மரணங்கள்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; இனி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்று முதல்வர் சொன்னதெல்லாம் வெறும் கண்துடைப்புதான் என்று மக்களை நினைக்க வைத்திருக்கிறது சமீபத்திய இந்த மரணம்.இதை இறுதி எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, கொடுங்கையூர் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் இனியும் லாக் அப் மரணங்கள் நடக்காமல் இருப்பதை காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் உறுதி செய்யவேண்டும்.
இதற்குமேலும் இந்த அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டினால், நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு லாக் அப் மரணங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
» கொடுங்கையூர் காவல்நிலைய சம்பவம்: எஸ்.ஐ. உள்பட 5 பேரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை
» கள்ளர் சீரமைப்பு விடுதிகளின் நிர்வாக மாற்றத்தை மறுபரிசீலனை செய்திடுக: ஓபிஎஸ்
கொடுங்கையூர் சம்பவம் பின்னணி: சென்னை செங்குன்றம், அடுத்த அலமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (31). இவரை, திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை போலீஸார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர், ராஜசேகர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago