தமிழகம் முழுவதும் 51 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் உள்துறை, சுகாதாரத் துறை செயலர்கள் உட்பட 51 ஐஏஎஸ்அதிகாரிகள் ஒரேநாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலராக பணீந்திர ரெட்டி, சுகாதாரத்துறை செயலராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது, வணிகவரித் துறை ஆணையராக இருந்த கே.பணீந்திர ரெட்டி, உள்துறை செயலராகவும், அப்பதவியில் இருந்தஎஸ்.கே.பிரபாகர், வருவாய் நிர்வாகஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலராக உள்ள முகமது நசிமுத்தீன், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலராகவும், சுகாதாரத்துறை செயலராக உள்ளஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலராகவும், சென்னை மெட்ரோ ரயில் மேலாண்இயக்குநர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலராகவும், அப்பதவியில் இருந்த தீரஜ்குமார், வணிகவரித் துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை சிறப்பு அலுவலர் பி.செந்தில்குமார், அத்துறையின் செயலராகவும், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முன்னாள் உறுப்பினர் - செயலர் ஆனந்தகுமார், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராகவும், தேசிய சுகாதார திட்ட இயக்குநர் தாரேஸ் அகமது, ஊரக வளர்ச்சித் துறை ஆணையராகவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராகவும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் எல்.நிர்மல்ராஜ், போக்குவரத்துத் துறை ஆணையராகவும், புலம்பெயர்ந்த தமிழர்கள் நல ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் எஸ்.கோபால சுந்தரராஜ், வணிகவரிபெரும் வரி செலுத்துவோர் பிரிவு இணை ஆணையராகவும், தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் இணை மேலாண் இயக்குநர் எம்.எஸ்.சங்கீதா, வணிகவரி நிர்வாகப் பிரிவு இணை ஆணையராகவும், திருச்சி மாவட்ட ஆட்சியர் எஸ்.சிவராசு, கோவை வணிகவரி இணைஆணையராகவும், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இணைஆணையர் எம்.மதிவாணன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநர் மரியம் பல்லவி பல்தேவ், தொழில்துறை கூடுதல் செயலராகவும், மின் ஆளுமை இயக்குநர் கே.விஜயேந்திர பாண்டியன், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையராகவும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் ஆர்.லால்வேனா, உணவு பாதுகாப்புத் துறை ஆணையராகவும், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, தொழில்முனைவோர் மேம்பாடு புத்தாக்க நிறுவன இயக்குநராகவும், நகராட்சி நிர்வாக இணை செயலர் ஏ.ஜான் லூயிஸ், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையர் செயலர்

அருங்காட்சியக இயக்குநர் எஸ்.ஏ.ராமன், பேரிடர் மேலாண்மை இயக்குநராகவும், தாட்கோ மேலாண் இயக்குநர் கே.விவேகானந்தன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலராகவும், சென்னை முன்னாள் ஆட்சியர் ஜெ.விஜய ராணி, சேலம் பட்டு வளர்ச்சி இயக்குநராகவும், பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி ஆணையர் ஜி.பிரகாஷ், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராகவும், ஊரக வளர்ச்சித் துறை சிறப்பு செயலர் பிங்கி ஜோவல், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் ஆணையராகவும், அப்பதவியில் இருந்த எம்.கருணாகரன், ஊரக வளர்ச்சித் துறை சிறப்பு செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் டி.என்.வெங்கடேஷ், போக்குவரத்துத் துறை சிறப்பு செயலராகவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைஇணை ஆணையர் ஆர்.சீதாலட்சுமி,சமூக நலத்துறை இணை செயலராகவும், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பிரவீண் பி.நாயர், மின் ஆளுமை இயக்குநராகவும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விச் சேவைகள் கழகத்தின் மேலாண் இயக்குநர் டி.மணிகண்டன், பள்ளிக்கல்வித் துறை இணை செயலராகவும், ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக இருந்த ஹர்சகாய் மீனா,திட்டம் வளர்ச்சித் துறை சிறப்பு செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) நரவானே மனிஜ் சங்கர் ராவ், ஊரகவளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநராகவும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநர் எம்.பிரதீப்குமார், திருச்சி மாவட்ட ஆட்சியராகவும், சேலம் பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் கே.சாந்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராகவும், சென்னை பெருநகர குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீரகற்று வாரிய முன்னாள் செயல் இயக்குநர் பி.ஆகாஷ், தென்காசி மாவட்ட ஆட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு கழக (டுபிசெல்) மேலாண் இயக்குநர் எம்.சாய்குமார், தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைவராகவும், தொழிலாளர் துறை செயலராக இருந்த ஆர்.கிர்லோஷ்குமார், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநராகவும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழக மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை இணை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தேசிய சுகாதாரத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரி பணியை கூடுதலாக கவனிப்பார்.

தொழில்துறை சிறப்பு செயலர் ஜெய முரளிதரன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக (டிட்கோ) மேலாண் இயக்குநராகவும், தமிழ்நாடுமாநில தேர்தல் ஆணைய செயலர் இ.சுந்தரவல்லி, தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக்கழக (சிப்காட்) மேலாண் இயக்குநராகவும், அப்பதவியில் இருந்த டி.ஆனந்த், சிறுதொழில் மேம்பாட்டுக் கழக (சிட்கோ) மேலாண் இயக்குநராகவும், சிட்கோ மேலாண் இயக்குநர் ஆர்.கஜலட்சுமி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் சேவை கழக மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மெட்ரோ ரயில் இயக்குநர்

பேரிடர் மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகமேலாண் இயக்குநராகவும், போக்குவரத்து ஆணையர் எஸ்.நடராஜன் (சீனியர்), தமிழ்நாடு கடல்சார் கழக துணைத் தலைவராகவும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநராக இருந்த எஸ்.விஜயராஜ் குமார், மின்விசை நிதி நிறுவன தலைவராகவும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த சங்கர்லால் குமாவத், சென்னை பெருநகர மாநகராட்சி இணை ஆணையராகவும் (சுகாதாரம்), வணிகவரி (நிர்வாகம்) இணை ஆணையர் கே.கற்பகம், தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் இணை மேலாண் இயக்குநரகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த எம்.ஏ.சித்திக், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அந்த உத்தரவில் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர்,சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர், திமுக ஆட்சிஅமைந்த ஓராண்டுக்கு பிறகு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்