கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து ஆலோசனை தெரிவிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் (சிற்றம்பல மேடையில்) ஏறி சுவாமி தரிசனம் செய்ய கோயில் பொதுதீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர்.
இதனையடுத்து கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில் கடந்த 7 மற்றும் 8-ம் தேதிகளில் கோயில் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவினர் சென்றனர். தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தராததால் திரும்பி சென்று விட்டனர்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிதம்பரம் சபாநாயகர் (நடராஜர்) கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டப் பிரிவு 23 மற்றும் 33-ன் படி ஆணையரால் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள், தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை, வரும் 20 மற்றும் 21-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை மணி 3 மணி வரை, துணை ஆணையர் மற்றும் ஒருங்கிணைப்பாளர், விசாரணைக்குழு, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை. எண் 8, ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலூர் - 607 001 என்ற முகவரியில் நேரில் தெரிவிக்கலாம்.
இந்த முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது "vocud.hrce@tn.gov.in" என்ற மின்னஞ்சலம் மூலமாகவோக, வரும் 21-ம் தேதி மாலை 3 மணிக்குள் தங்கள் கருத்துகளை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago