சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்கப்பாதை தோண்டும் பணிக்காக, 23 ராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் ஆகஸ்ட் மாதத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபரில் பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது.
இந்தத் திட்டத்தில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. உயர்மட்ட பாதை, சுரங்கப்பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில், உயர்மட்டப் பாதைக்காக, தூண்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.
23 ராட்சத இயந்திரங்கள்
இந்நிலையில், சுரங்கப்பாதை தோண்டும் பணிக்காக 23 ராட்சதசுரங்க துளையிடும் இயந்திரங்கள்ஆகஸ்ட் மாதம் வரும் என்றும்,அக்டோபரில் பணிகள் தொடங்கும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன.
சுரங்கப் பாதை தோண்டும் பணி குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:
இரண்டாம் கட்ட திட்டத்தில் இரட்டை சுரங்கப் பாதை தோண்ட 23 ராட்சத இயந்திரங்கள் வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் வர வாய்ப்பு உள்ளது. இதனால், செப்டம்பர் அல்லது அக்டோபரில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கும். ஏனெனில், இயந்திரங்களை நிலத்தடியில் ஒன்று சேர்ப்பதற்கும், வரிசைப்படுத்துவதற்கும் சிறிது காலம் தேவைப்படும்.
30 நிலையங்களைக் கொண்ட 26.7 கி.மீ. நிலத்தடி தொலைவு கொண்ட 3-வது வழித்தடத்தில் 15 ராட்சத துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படலாம். அதாவது மாதவரம்-கெல்லீஸ் வரை 9 கி.மீ. தொலைவுக்கு 7 ராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களும், கெல்லீஸ்-தரமணி வரை 8 ராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படும்.
சவாலான இடங்கள்
கொளத்தூர் சந்திப்பு-வில்லிவாக்கம் வரை 5 கி.மீ. தொலைவுக்கு 4 ராட்சத சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களும், கலங்கரை விளக்கம்-மீனாட்சி கல்லூரி வரை (வழித்தடம்-4) 10 கி.மீ-க்கு 4 இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
நாதமுனி முதல் ரெட்டேரி வரை 5 கி.மீ. பாதையில் கடினமான பாறைகள் அடையாளம் காணப்பட்ட சவாலான இடங்கள் வழியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளன. இதுபோல, நந்தனம் மற்றும் பனகல் பூங்கா இடையேயான 1.3 கி.மீ. பாதையில், பாறை மண் நிலைகள் உள்ளன. இங்கு ராட்சத துளையிடும் இயந்திரங்கள் மூலம், தற்போதுள்ள முதல் கட்ட சுரங்கங்களுக்கு கீழே 24 மீட்டர் முதல் 26 மீட்டர் ஆழத்தில் துளை அமைக்கப்படும்.
மாதவரம்-மில்க் காலனி இடையே சுரங்கப்பாதை பணிக்கு இந்த ராட்சத துளையிடும் இயந்திரம் ஓரிரு மாதங்களில் வந்துவிடும். அக்டோபரில் சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்க வாய்ப்பு உள்ளது.
ஜப்பான், சீனா
இந்த இயந்திரங்கள் ஜப்பான், சீனாவில் இருந்து வரவழைக்கப்படவுள்ளன. இதற்காக, ஒரு குழு அந்த நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்து, அதன்பிறகு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த இயந்திரங்கள் பகுதி பகுதியாக வரவுள்ளன. முன்னதாக, அந்தந்த நிறுவனங்களில் இயந்திரங்கள் இயக்கி பரிசோதனை செய்யப்படவுள்ளன. சுரங்கப்பாதையை தோண்டும் பணியை டாடா புராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் எல் அண்டு டி நிறுவனங்கள் செய்யவுள்ளன என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago