தேமுதிகவுடன் இணைந்ததால் மக்கள் நலக் கூட்டணி திசைமாறி போய்விட்டது: பண்ருட்டி ராமச்சந்திரன் கருத்து

By கி.ஜெயப்பிரகாஷ்

தமிழக முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாள ருமான பண்ருட்டி ராமச்சந்திரன், ஆலந்தூர் தொகுதி அதிமுக வேட் பாளராக களம் இறங்கியுள்ளார். 78 வயதில் 10-வது முறையாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டி யிடும் அவர், ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

பிரச்சாரத்துக்கு செல்லும் இட மெல்லாம் மக்கள் இன்முகத்தோடு வரவேற்கின்றனர். விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகிய அரசு நலத்திட்டங்கள் தங்களின் சுமையை குறைத்துள்ள தாக பெண்கள் மகிழ்ச்சி தெரிவிக் கின்றனர். திருமண உதவி திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் உள்ளிட்டவை அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது.

அதிமுக எத்தனை தொகுதிகளை கைப்பற்றும்?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதுபோல, சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 200 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை யுடன் ஆட்சி அமைக்கும்.

தேர்தல் கருத்துக்கணிப்புகள் பற்றி?

எத்தகைய கேள்விகளை, யாரிடம் கேட்பது என்பதில்தான் கருத்துக்கணிப்புகள் அமையும். கடந்த 1967 முதல் தற்போது 10-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன். என்னுடைய கணிப்புப்படி, தமிழகத்தில் அதிமுக மீண்டும் தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

கனமழையின்போது அதிமுக அரசு மெத்தனமாக செயல்பட்டதாக அரசி யல் கட்சியினர் கூறுகிறார்களே?

கனமழை ஏற்பட்டபோது அதிமுக அரசு மேற்கொண்ட சிறப்பான பணிகளால் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது, தொற்றுநோயும் தடுக்கப்பட்டது. இந்த சேவையை மத்திய அரசின் வல்லுநர் குழுவே பாராட்டியுள்ளது.

இன்னும் சில பகுதிகளுக்கு வெள்ள நிவாரண நிதி கிடைக்க வில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளார்களே?

வெள்ள நிவாரண நிதி இன்னும் சிலருக்கு சென்றடையவில்லை என்பது உண்மைதான். அடுத்தகட்டமாக நிதியை வழங்குவதற்குள் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. தேர்தல் முடிந்ததும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிச்சயம் நிதி வழங்கப்படும்.

தமிழகத்தில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி, மாற்று அரசியல் அணியாக அமையுமா?

மக்கள் நலக் கூட்டணி ஆரம்பத்தில் தெளிவாகவும் சிறப் பாகவும் செயல்பட தொடங்கியது. ஆனால், நாளடைவில் அந்த அணி திசைமாறி போய்விட்டது. அதிமுக, திமுகவுக்கு நம்பத்தகுந்த மாற்று ஏற்பாடாக அமையவில்லை. எனவே, மக்கள் நலக் கூட்டணி தமிழக அரசியலில் எந்த விளைவும் ஏற்படுத்தாது. கூட்டணிக்கு வலுசேர்க்க வேண்டுமென தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துக் கொண்டனர். குடும்ப அரசியலை எதிர்த்து தொடங்கிய கூட்டணி, ஒரு குடும்பத்தின்கீழ் இயங்க வேண்டிய சூழலுக்கு போய்விட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்