கோயில் விழாவில் தகராறு: கடம்பூர் ராஜு எம்எல்ஏ உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான கடம்பூர் ராஜு உட்பட 14 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் செ.ராஜுவின் சொந்த ஊரான கடம்பூர் அருகே கே.சிதம்பராபுரத்தில் உள்ள அரிய நாயகியம்மன் கோயிலில் கடந்த 8-ம் தேதி கொடை விழா நடைபெற்றது. இதில் எம்எல்ஏவுக்கு முதல் மரியாதை கொடுக்கவில்லை எனக்கூறி தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, கே.சிதம்பராபுரம் ஊராட்சி துணைத் தலைவர் சுப்பாராஜ் மற்றும் சிலர், ஊரில் பொதுவாக நடக்கும் விழாவில் யாருக்கும் தனி மரியாதை அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, ஏற்பட்ட தகராறில் அதே பகுதியைச் சேர்ந்த குருசாமி(42), சுதர்சன், மனோகரன் ஆகியோர் தாக்கப்பட்டனர்.

இதில் காயமடைந்த குருசாமி, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவர் கடம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ, நீலகண்டன் உட்பட 9 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொடை விழாவில் சப்பரம் புறப்பாட்டின்போது, கண்டி என்ற சுப்புராஜ், அவரது மகன் குருசாமி உள்ளிட்ட 5 பேர் தன்னை கீழே தள்ளி, தாக்கி செல்போனை பறித்ததாக நீலகண்டன் புகார் அளித்தார். இதன் பேரில் 5 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்